புதன், 30 ஏப்ரல், 2014

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் !!

செல்லப்பா சார் தன்னுடைய வலையிலே  இந்தக் காலத்து கலாச்சாரத்தைப் பற்றி எழுதி  இருந்தார்.கொஞ்சம் என்ன ரொம்பவே  வருத்தப்பட்டு தான் எழுதி இருந்தாப்போல...   
+Chellappa Yagyaswamy  அதுக்கு நிறைய பின்னூட்டங்கள். அது படித்துக்கொண்டு வரும்போது ஒரு சத்தம் கேட்டது.  செல்லைப்  பார்த்தேன்.ஒரு மெசேஜ் வந்திருக்கு.  யார் என்று பார்த்தேன். அட. செல்லப்பா  சார் தான் போன் செய்து  இருக்கிறார்.

திடீர் என்று நினைவு வந்து, வீட்டின் டி.வி. ரூம் நோக்கி கத்தினேன். அங்கே தான் என்  வீட்டுக்காரி, தினசரி மாலை 5.59 முதல் இரவு 11.01 வரை சங்கமம். 

மீனாட்சி, நம்ம ப்ரண்ட் செல்லப்பா சார் புத்தகம் முழுக்க படிச்சுட்டயா ? அவர் வர ஞாயிறு வந்தாலும்  வருவார்.

கொச்சடயான் படத்துக்கு நமக்கும் சேர்த்து பர்ஸ்ட் ஷோ ரிசர்வ் பண்ண உங்க ப்ரண்ட் ஆவிக்கு  செல் .போடுங்க..

மணப்பெண்ணின் சத்தியம் பாட்டு தியேட்டர்லே கேட்கணும். சாரங்க ராகம் அதுலே வருது சூப்பர். 

அது  இருக்கட்டும். நான் "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " படிச்சு முடிச்சாச்சா அப்படின்னு கேட்டேன்.

நேத்திக்கே வெண்டை காய் சாம்பார் பண்ணியாச்சே. என்றாள்.

என்னது சாம்பார் ஆ ? அந்தக் கால ஜெமினி கணேசன் சமாசரமாச்சே

என்று வியந்தபோது, 

ஜூனியர் கிச்சன் போட்டி லே இன்னிக்கு போண்டா ... என்றாள் இவள்.

ஏண்டா இவகிட்ட பேசுறோம் என்று இருந்தது.  ஒரு வேளை நாம் பேசுவது கேட்கவில்லை போல்  இருக்கிறது. இ. என். தி. ப்ராப்ளமா இருக்குமோ, இருக்காது.  டி.வி.லே கான்சென்ட்ரேசன் போல இருக்கு. 
இப்ப கருத்தம்மாவிலே ரொம்ப முக்கியமான சீன் .   இது முடிஞ்சு,  பின்னே,தெய்வம் தந்த வீடு, புதுக்கவிதை, சரவணன் மீனாச்சி, சூப்பர் ஜூனியர் சிங்கர் என்று காலம் தாழ்த்தினால், எனக்கு என்ன கேட்கனும் அப்படின்னே மறந்து போயிடும் .

மீனாட்சி !! அதெல்லாம்  கேட்கல்ல. தாத்தா தோட்டத்து... என்று ஆரம்பித்தேன்.

உங்க பெங்களூர் பி.ஹெச். இ. எல். தாத்தா கதை இன்னமும் முடிக்கல்ல..

இவ ஒரு வேளை ஜி.  எம்.பி. சார் கொடுத்துட்டு போன புத்தகத்தைப் பத்தி பேசுகிறாளோ  என்று தோன்றியது.

அந்த புத்தகம் படிச்சாச்சா ஒன்னு இரண்டு கதையாச்சும் ?

வடிவேலு  காபி வித் டி. டி. சூப்பர் என்றாள்.

யாரு டி. டி. ? நம்ம திண்டுக்கல் தனபாலன் சாரா ?
+Dindigul Dhanabalan
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ....

என்ன இது ? நம்ம கேட்டதும் இவ பதில் கொடுப்பதும் ஒன்னுக்கொன்னு சரியில்லையே. ? என்ன கோபமோ தெரியல்லையே. இன்னிக்கு நான் முழிச்ச வேளையே சரியிலையே !!

என்று நினைத்துக்கொண்டு

இருந்தாலும் இவளை, கொஞ்சம் விட்டுத் தான் புடிக்கணும் .
துணிவே துணை. என்று மனதில் சபதம் இட்டுக்கொண்டு,


யார் ஜட்ஜ் மகாஜன் சாரா ?

அந்த மைலாபூர் மாமி பழைய நினைவுகள் எல்லாம் எழுதிட்டு வராங்க..நீங்க படிக்கலையா? அந்த குழ்ந்தை லாப் டாப் லே என்ன ஒரு அழகு !! என்று முறுவலித்தாள்
+revathi narasimhan
நான் விடவில்லை.

யாரு லஸ் சர்ச் ரோடிலே இருக்காங்களே அவங்களா ?

மாந்துரையான் பத்தி வை.கோ. மாமா சொன்னது தான்  சரி.
+Gopalakrishnan Vai.
என்னவோ இவளுக்கு ஆயிடுத்து.   பூச்சி கடி, தேளு கடி, பாம்பு கடிக்கெல்லாம் ஷஷ்டியை நோக்கி சரவண பவனார் சொல்லும் வானபட்டரை மாரியம்மன் ஆத்தா அர்ச்சகர் ஸ்ரீ வித்யா உபாசகர்,  கிட்ட சொல்லி,
இதுக்கெல்லாம் ஒரு சொலுஷன் இருக்கான்னு கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டபோது 
சங்கரா டி.வி. லே ஒரு அட்வர்டைஸ்மென்ட் வருது. 

ஆண்டவா, கொஞ்சம் சீக்கிரமா வா எனக்கு உசிரே போகுது என்று சகல தேவதா தேவிகளையும் பாராயணம் செய்து கொண்டு, அதே சமயம், 
மனுஷ்ய ப்ரயத்னத்தையும் விட்டு விடக்கூடாது என்ற வசனம் இருக்கிறபடியால்,

இங்கே பாரு, மீனாச்சி.. எனக்கு பொறுமை அவுட் என்று இரைந்தேன்.

என்ன அவுட் ? .. என்று பதில்  வந்தது.
அதைத் தொடர்ந்து,
அடடே .. நானும்  அவுட். out என்றாள்.

என்ன அவுட் ?  அதான் வர்டிகலா இருக்கியே. அப்பறம் என்ன அவுட் ?
என்று     
 னேன்.


அத சொல்லலே.
விஜய் டி.வி. லே. அது இது எது நடக்குதுல்லே..

 ஆமாம்.

அதுலே மாத்தி யோசி அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.

ஆமாம். என்ன  கேட்டாலும்,அதற்கு மாறாக வேற எதுனாச்சும் சொல்லணும்.
அதத்தானே  சொல்றே.

ஆமாம். நான் ஒரு நாளைக்கு போய் கலந்துக்கலாம் அப்படின்னு நினைச்சேன்.
அது தான் இப்ப ஒரு ரிகர்சல் பண்ணிப் பார்த்தேன்.
ஆனா தோற்று போய் விட்டேனே !!

அப்ப நான் ஜெயிச்சுட்டேனா..?

அடையார் ஆனந்த பவனில் அல்வா சாப்பிட்டது மாதிரி ஒரு பீலிங் 

இந்த சந்தோசம் எத்தனை தடவை கிடைக்கும் !!

எனக்குக் கிடைத்தது போல் எல்லோருக்கும் 
அட்சய திருதீயை நல்ல நாளன்று, தங்கம் வேண்டாம், வைரம் வேண்டாம். நவரத்னங்களும் வேண்டாம். 

அட் லீஸ்ட் லைப் லே ஒரு நாளாச்சும் இந்த கணவன் மார்கள் ஜெயிப்பதற்கு அருள் செய்யம்மா 
என்று கன்னத்திலே போட்டுக்கொண்டு 

தஞ்சாவூர் பிரண்டு துரை செல்வராஜ் அவர்கள் வலையிலே நான் பார்க்கும் 

+துரை செல்வராஜூ

சந்திர கலாதரி, சந்திர ஜடாக்ஷரி, மஹாலக்ஷ்மி, தேவி  எல்லார் முன்னால் மானசீகமா உட்கார்ந்து கொண்டு  பாட துவங்கினேன். 

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் !!



10 கருத்துகள்:

  1. வெற்றபெற்றதற்கு வாழ்த்துகள்..

    கலகலப்பான நிகழ்ச்சி பார்த்த திருப்தி...

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர்..
    நீங்க ஜெயிச்சிட்டீங்களா..
    சந்தோஷந்தான்.. இன்னும் பலநூறு தடவை கிடைப்பதாக!..
    தங்களின் பதிவின் ஊடாக என்னையும் குறிப்பிட்டதற்கு மகிழ்ச்சியும் நன்றியும்!..

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன் சிரித்தேன் சந்தோஷம் தாத்தா ! எப்படியோ ஜெயித்து விட்டீர்கள் அட்சய திருதி தானே தொடர்ந்து ஜெயிப்பீர்கள்.
    வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  4. அட் லீஸ்ட் லைப் லே ஒரு நாளாச்சும் இந்த கணவன் மார்கள் ஜெயிப்பதற்கு அருள் செய்யம்மா
    என்று கன்னத்திலே போட்டுக்கொண்டு...... //

    வரம் கிடைக்காது தவத்தில் இருக்கும்
    கோடானுகோடி "ஆண்பாவங்களில் "
    அடியேனும் ஒருவன்
    உங்கள் வெற்றித் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    சுவாரஸ்யமான பகிர்வு தந்தமைக்கு
    கூடுதல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இந்த பதிவினை இரண்டு தடவை படிக்க வேண்டி இருந்தது. ஒன்றுமில்லை ரசித்து படிக்கத்தான்.

    சாம்பார்னா என்னடா கேவலம்? – ஜெமினி பேசும்போது சிரித்து விட்டேன். உங்கள் குறும்பு .

    G.M.B அய்யா என்ற 74 வயது இளைஞரை பெங்களூரு தாத்தா ஆக்கி விட்டீர்களே?

    மாந்துறை பக்கம் உள்ள ஆங்கரைதான் உங்கள் ஊர் எனும்போது மிக்க மகிழ்ச்சி! உங்கள் ஊரைத் தாண்டிதான் எங்கள் ஊர் திருமழபாடி செல்ல வேண்டும்.



    பதிலளிநீக்கு
  6. ரசித்து படித்தேன்...

    அசத்துறீங்க... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : அ.பாண்டியன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : அரும்புகள் மலரட்டும்

    வலைச்சர தள இணைப்பு : சூரியனுக்கு டார்ச் அடிச்சு பார்த்திடலாமா!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. அன்பு நண்பர் சூரி சுப்பு இரத்தினம் - வலைச்சர அறிமுகம் வழியாக வந்தேன் - தாத்தாவும் பாட்டியுமாக சண்டை போட்டுக் கொண்டீர்களாக்கும். ம்ம்ம்ம்ம்ம் - பரவாய் இல்லை. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - தங்களீன் " நின் " என்ற சொல்லினை மறக்க மாட்டேன் - மனதில் ஆழப் பதிந்த சொல் - பாடலினைப் படிக்கும் போது - சரியான இடத்தில் அச்சொல்லினை சொருகி விட்டீர்களே ! பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - மகிழ்ச்சி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு